கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்க துறை அமைச்சர் சக்கரபாணி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்களான மதியழகன், ராமசந்திரன், பிரகாஷ், மேயர் சத்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே .கோபிநாத் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ்  தலைவர் 
எம் .சி. இரகு,முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசு துரைராஜ், மாவட்ட துணை தலைவர் தளபதி ரகமத்துல்லா, சூளகிரி  கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர் ஶ்ரீராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ