மேலகரம் பேரூர் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா .!

தென்காசி

மேலகரம் பேரூர் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா .!

மேலகரம் பேரூர் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

 தென்காசி நவ 27

தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூர் திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞர் அணி செயலாளருமாகிய உதயநிதி ஸ்டாலினின் 49 வது பிறந்தநாள் நிகழ்ச்சி பேரூர் திமுக செயலாளர் சுடலை தலைமையில் இன்று நடைபெற்றது.

பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் குடியிருப்பு  பரூக் நினைவு துவக்கப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட் புக் பேனா வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் கவுன்சிலர் கபிலன், பொருளாளர் ரமேஷ் குமார், ஈனமுத்து பாண்டியன், கல்யாண சுந்தரம், வீரபாண்டியன், பட்ட தேவர்,நன்னை பாலு, விக்னேஷ், மாரி, குடியிருப்பு கணேசன், சந்திரன், செந்தில்குமார், ஆயிரப்பேரி முத்துவேல், குத்தாலிங்கம், பகவதிராஜ், குருசாமி, பூபதி, ஈஸ்வரன் என்ற மணி, பட்டன், குற்றாலம் குத்தாலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்