ஹெக் பஞ்சத் தர்காவில் நடைபெற்ற அமாவாசை சிறப்பு தொழுகை .!

கிருஷ்ணகிரி

ஹெக் பஞ்சத் தர்காவில் நடைபெற்ற அமாவாசை சிறப்பு தொழுகை .!

கிருஷ்ணகிரி ஹெக் பஞ்சத் தர்காவில் நடைபெற்ற அமாவாசை சிறப்பு தொழுகையின் போது வருகை தந்த அண்மையில் அதிமுகவில் இணைந்த எஸ்.கே. நவாப் அவர்களுக்கு பொன்னடை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி சங்கல் தோப்பு தர்க்கா அருகில் அமைந்துள்ள ஹெக் பஞ்சத் தர்காவில் ஒவ்வொரு அமாவாசையின் போது சிறப்பு தொழுகை நடைபெறுவது வழக்கம். அதுபோல் நேற்று ஹெக்பஞ்சத் தர்காவில் அமாவாசை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.


 
ஹெக் பஞ்சத் தர்காவின் தலைவரும் அறக்கட்டளையின் தலைவருமான அன்ஷார் தலைமையில் நடைபெற்ற 
இந்த சிறப்பு தொழுகையில் அண்மையில் திமுக - வில் இருந்து விலகி அதிமுக வில் இணைந்த எஸ்.கே.நவவாப் கலந்துக் கொண்டார்.

அப்போது தர்காவின் தலைவர் அன்ஷார் மற்றும் தர்கா கமிட்டியினர் சார்பில் எஸ்.கே.நவாப் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். மேலும் இந்த சிறப்பு தொழுகையில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட சமுக  நகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்த சிறப்பு தொழுகையில் கலந்துகொண்ட எஸ்.கே. நவாப், தர்கா கமிட்டியினர் கொடுத்த வரவேற்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் இந்த தொழுகையில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு மற்றும் பிரியாணி உணவினையும் வழங்கினார்.

இந்த விழாவில் நுகர்வோர் அமைப்பினை சேர்ந்த ஜெய்சன் உள்ளிட்ட ஹக் பஞ்சத் தர்காவின் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ