செங்கோட்டையில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி பரப்புரை நிகழ்ச்சி.!
தென்காசி
செங்கோட்டையில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி பரப்புரை நிகழ்ச்சி
தென்காசி டிச 12
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி, செங்கோட்டையில் என் வாக்கு சாவடி வெற்றி வாக்குச் சாவடி பரப்புரையில் திமுக அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் மூலம் பொது மக்களிடம் எடுத்துரைத்து மீண்டும் திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை முதல்வராக்க இந்திய கூட்டணியை ஆதரிக்க வேண்டி, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் குணசேகரன், நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன், மாவட்ட திமுக மகளிர் அணி தலைவர் ரஜப்பாத்திமா உள்ளிட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், பாக முகவர்கள், இணைய பாக முகவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
