தென்காசியில் 40 வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி.!

தென்காசி

தென்காசியில் 40 வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி.!

தென்காசியில் 40 வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி

தென்காசி ஆகஸ்ட் 27

40வது தேசிய கண்தான விழிப்புணர்வு  பேரணி
 இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி.
தென்காசி மாவட்ட துணை கிளையின் சார்பில்,
திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை,
பாவூர்சத்திரம்  கண்தான விழிப்புணர்வு குழு,
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் இணைந்து,
தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை செவிலியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடை பெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் மருத்துவர் மீனாட்சி  தலைமை வகித்தார்.

பேரணியை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர்
கோவிந்தன்  கொடியசைத்து  துவக்கி வைத்தார்.
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தென்காசி மாவட்ட துணை கிளையின் செயலாளர் முகம்மது அன்சாரி  அனைவரையும் வரவேற்றார்.
கண்தான விழிப்புணர்வு குழுவின் நிறுவனர் லயன் கேஆர்பி. இளங்கோ  தொகுப்புரை ஆற்றினார்.
 

பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு பொருளாளர் சந்திரன், துணைத் தலைவர்
முருகன், வட்டாரத் தலைவர்  லயன் ஆனந்த், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க உறுப்பினர் லயன் அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருநெல்வேலி  அரவிந்த் கண் மருத்துவமனை  கருவிழி முதன்மை மருத்துவர் அனிதா மருத்துவர் திவ்யன் ஆபிரகாம்,
தென்காசி ரெடி கல்வி மைய நிறுவனர் முனைவர் வில்சன் அருளானந்தன் ஆகியோர்  விளக்கவுரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லயன்சுரேஷ்  நினைவு பரிசு வழங்கினார்.

இந்தியாவில் 6.8 மில்லியன் பார்வையற்றோர் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பதால்  ஒவ்வொரு ஆண்டும் கருவிழி மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை அதிகரித்து வருகிறது.கருவிழி பார்வையற்றோரின் எண்ணிக்கையை குறைக்கஅரசு கலை & அறிவியல் கல்லூரி என்.சி.சி மாணவர்கள்,
யூத் ரெட்கிராஸ் மாஸ் கம்யூனீட்டி & பாரா-மெடிக்கல கல்லூரி மாணவ மாணவிகள், பாவூர்சத்திரம் GIT இன்ஸ்டியூட் மாணவிகள், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை செவிலியர்கள்& பணியாளர்கள் ஆகியோரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

யூத் ரெட்கிராஸ் & மாஸ் கம்யூனீட்டி & பாரா மெடிக்கல் கல்லூரி சார்பில் முதல்வர்  செய்யதலி பாத்திமா  வழி நடத்தி சென்றார்.இதில் 150 மாணாக்கர்களும் தன்னார்வளர்களும் பேரணியில் கலந்து  கொண்டார்கள்.
பேரணி முடிவில் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் லயன் சுப்புராஜ்  நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்