கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுக பார்வையாளர் அறிமுக கூட்டம் .!
தென்காசி
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுக பார்வையாளர் அறிமுக கூட்டம்
தென்காசியில் நடைபெற்றது
தென்காசி அக் 25
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுக பார்வையாளர் அறிமுக கூட்டம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம் தலைமை வகித்தார். பார்வையாளர்கள் கலைக் கதிரவன், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி திமுக பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள குணசேகரனை மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் அறிமுகப்படுத்தி, வரும் 29ஆம் தேதி தென்காசியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வருகை தரும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என கூறினார்.
இந் நிகழ்ச்சியில் விவசாய அணி இணை செயலாளர் அப்துல் காதர், மாவட்டத் துணைச் செயலாளர் கனிமொழி, பொருளாளர் ஷெரிப், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை ரஹீம், சாமித்துரை, ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், ரமேஷ், சீனித்துரை, நகர செயலாளர்கள் சாதிர், வழக்கறிஞர் வெங்கடேசன், கணேசன், பேரூர் செயலாளர்கள் சங்கர் என்ற குட்டி, சுடலை, முத்தையா, பண்டாரம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜா, அழகு தமிழ் சங்கர், அறங்காவலர் சுந்தர்ராஜன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
