கதவணிஊராட்சியில் நடுநிலைப்பள்ளிஆண்டு விழா.!

கிருஷ்ணகிரி

கதவணிஊராட்சியில் நடுநிலைப்பள்ளிஆண்டு விழா.!

கதவணிஊராட்சியில் நடுநிலைப்பள்ளிஆண்டு விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட கதவணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா தலைமையாசிரியர் ஜோதி அவர்களால் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சாந்தி வட்டாரக்கல்வி அலுவலர், Dr.பழனிச்சாமி, வட்டாரக்கல்வி அலுவலர் வசந்தி வட்டார மேற்பார்வையாளர் BRC, சிவக்குமார் PTA தலைவர், அன்னைசத்யா SMC தலைவர். பாஸ்கர் ஊர் மூப்பர், சரவணன் ஊர் செட்டியார், சிவானந்தம் ஒ.கு.உ., அம்பிகா அன்புமணி மு. து. த, வனஜா ஓய்வு ஆசிரியர், வடமலை, கேசவன் கலந்து கொண்டார்கள்.
 
அதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான தமிழ்நாடு அரசால் பல விருந்துகளை பெற்றுத்தந்த தலைமையாசிரியர் ஜோதி அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கதவணி ஊராட்சி செயலாளர் அருணாசலம், வழக்கறிஞர் குணசீலன், கிளைச் செயலாளர் சரவணன், சம்பத்,இளைஞர் அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், வர்த்தக அணி பெருமாள் ஆகியோர் ஒன்றிணைந்து தலைமையாசிரியர், உதவி ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, காலை உணவு ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கௌரவிக்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பேச்சுப்போட்டி, விளையாட்டு போட்டி, கலை  நிகழ்ச்சிகளோடு பெற்றோர்கள், மாணவர்கள் முன்னாள் மாணவர்கள், மற்றும் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ