சட்ட விரோத குடியேற்றம் என கூறி தனி விமானம் மூலம் இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்க அதிபர்டிரம்ப்.! இந்திய பிரதமரின் நடவடிக்கை என்ன?

இந்தியா

சட்ட விரோத குடியேற்றம் என கூறி தனி விமானம் மூலம் இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்க அதிபர்டிரம்ப்.! இந்திய பிரதமரின் நடவடிக்கை என்ன?

நியூயார்க்: இந்தியர்களை இந்தியாவை நோக்கி நாடு கடத்த தொடங்கி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். பிரதமர் மோடியின் ரியாக்சன் இதற்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டவிரோத இந்தியர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க ராணுவ விமானம் இன்று அதிகாலை சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டு உள்ளது. அமெரிக்கா சட்டவிரோத இந்திய குடியேறிகளை நாட்டிற்கு திருப்பி அனுப்பத் தொடங்கி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அவர்கள் இந்தியாவிற்கு வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

C-17 விமானம் இதற்காக இந்தியாவுக்குப் புறப்பட்டது. இதற்கு பிரதமர் மோடியின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்ற கேள்வி நிலவுகிறது. அதற்கு முன் கொலம்பியா இந்த விவகாரத்தில் என்ன மாதிரியான ரியாக்சன் தந்தது என்று பார்க்க வேண்டும்.

கொலம்பியா ரியாக்சன்:

அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி உள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முடிவு செய்துள்ளார். இதற்காக அமெரிக்காவின் விமானப்படை விமானங்களை பயன்படுத்தி வருகிறார். இந்த விமானங்கள் அத்துமீறி குடியேறியவர்களின் சொந்த நாட்டிற்கே கொண்டு சென்று விடும். இந்த விமானங்கள் தரையிறங்குவதற்கு அந்தந்த நாடுகள் அனுமதி தர வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அமெரிக்காவில் 4 விதமான மக்கள் அதிக அளவில் அகதிகளாக, ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளனர். கொலம்பியா மக்கள், மெக்சிகோ மக்கள், இந்தியர்கள், ஆப்பிரிக்கர்கள் அதிக அளவில் அங்கே ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள கொலம்பிய மக்களை வெளியேற்றுவதில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக கொலம்பியா நாடு மீது கூடுதல் வரிகளையும் கூட அவர் விதித்து உள்ளார். கொலம்பியா மக்களை அந்நாட்டிற்கு திரும்பி அனுப்ப அமெரிக்க விமானப்படை விமானம் தயாராக இருந்தது.

ஆனால் இதை தரையிறங்க அனுமதிக்க மாட்டோம் என்று கொலம்பியா அரசு கூறி விட்டது. இதையடுத்து பிளைட்டை தரையிறங்க விடுங்க.. இல்லைனா வரி கூடிக்கிட்டே போகும் என்று எச்சரித்த டிரம்ப் கொலம்பியாவின் பொருட்கள் மீது கூடுதலாக 25% வரி விதித்தார். இதையடுத்து வேறு வழியின்றி அமெரிக்காவில் இருந்து வரும் அகதிகள் விமானத்தை கொலம்பியா ஏற்றுக்கொண்டுள்ளது.

அதோடு அமெரிக்காவில் இருந்து கொலம்பியா மக்களை வெளியேற்ற அதிகாரபூர்வமாக கொலம்பியா அரசே விமானங்களை அனுப்பி உள்ளது. டிரம்ப் விதித்த வெறியால் அச்சம் அடைந்து வேறு வழியின்றி கொலம்பியா இறங்கி வந்துள்ளது. வெறும் 24 மணி நேரத்தில் கொலம்பியா டிரம்பின் அதிரடி காரணமாக இறங்கி வந்துள்ளது.

இந்தியா ரியாக்சன் என்ன?

1. இப்படிப்பட்ட நிலையில்தான் மோடியின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்ற கேள்வி நிலவுகிறது. மோடி இப்படிப்பட்ட வெளியேற்றப்படும் இந்தியர்களை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி உள்ளது.

2. இல்லையென்றால் அமெரிக்காவின் விமானம் தரையிறங்க அனுமதிப்பாரா என்ற கேள்வி உள்ளது.

3. அப்படியும் இல்லை என்றால்.. இந்தியா தனியாக இதற்கு கொலம்பியா போலவே சிறப்பு விமானங்களை இயக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

4. இப்படி நாடு கடத்தப்படும் இந்தியர்களை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்.. இந்தியா மீது டிரம்ப் கூடுதல் வரி விதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

5. இதனால் வரி விதிப்பு நடவடிக்கைக்கு மோடி தயாராக இருப்பாரா அல்லது வேறு நடவடிக்கை, திட்டங்களை மோடி மேற்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் இதுவரை மத்திய அரசும், வெளியுறவுத்துறையும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.