தென்காசியில் பகல் கனவு திரைப்படம் வெளியீடு .!

தென்காசி

தென்காசியில் பகல் கனவு திரைப்படம் வெளியீடு .!

தென்காசியில் பகல் கனவு திரைப்படம் வெளியீடு

வில்லன் நடிகர் வேலாயுதபாண்டியன்
பங்கேற்பு

தென்காசி நவ 08

தமிழகமெங்கும், கடந்த வெள்ளி அன்று வெளியான பகல் கனவு திரைப் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான தென்காசியை சேர்ந்த வேலாயுத பாண்டியன் தென்காசி பத்மம் தியேட்டரில் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்து ரசிகர்களுடன் சேர்ந்து திரைப் படத்தை ரசித்து பார்த்தார்.

இந்நிகழ்வில் கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் கடையம் பெரும் பத்து தொழிலதிபரும் திமுக நிர்வாகியுமான பரமசிவன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமானுல்லா, சிங்ககுட்டி வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் காசிமேஜர்புரம் ஊர் பொதுமக்கள் தொழிலதிபர்கள் வியாபாரிகள் அரசியல் கட்சியினர் நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் திரைப் படத்தை காண வந்திருந்தனர்.

முன்னதாக திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு தாரை தப்பட்டை மேளதாளத்துடன், இனிப்புகள் வழங்கி  வரவேற்பு அளித்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்