தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர் அர.சக்கரபாணி
சினிமா

தனது தபேலா இசையால் உலகத்தையே கட்டி ஆண்டு வந்த இந்தியாவின் பெருமைமிகு இசைக்கலைஞர்nஜாகீர் உசேன் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது உணவு பொருள் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி
4 முறை கிராமிய விருதுகள், பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் பெற்று உலகப் புகழ்பெற்ற இவரது மறைவு, இந்திய நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார் அமைச்சர் அர.சக்கரபாணி.