மேட்டுப்பாளையம் பகுதியில் வஃபு திருத்த சட்ட மசோதா சம்பந்தாமாக ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.!
மேட்டுப்பாளையம்

ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ திரும்ப பெறக் கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!
கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மு. அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் ர.முஹம்மதுஅப்பாஸ் வரவேற்புரையாற்றினார்.
.தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் நாசர், மமக மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் , நகர தலைவர் அனீபா , தமுமுக நகர செயலாளர் ஜாபர் சாதிக், மமக நகர செயலாளர் ஜுபைர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுமுக மாநில தலைமை கழக பேச்சாளர் கோவை ஜைனுல் ஆபிதீன் கண்டன உரை நிகழ்த்தினார்.
திமுக நகர வடக்கு தெற்கு செயலாளர்கள் முஹம்மது யூனூஸ் , முனுசாமி , ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஷெரீப் ஹாஜியார், செயலாளர் அக்பர் அலி, காங்கிரஸ் நகர செயலாளர் தங்கமணி, முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அய்யூப், வி.சி.க மாவட்ட செயலாளர் தொல்குடி மைந்தன், இந்திய கம்யூனிஸ்டு நகர து.செயலாளர் மன்சூர், JAQH மாவட்ட து.தலைவர் ஜாபர் சாதிக், W.I.P. மாவட்ட தலைவர் ஜெய்லாப்தீன், ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சிறப்பு அழைப்பாளராக மேட்டுப்பாளையம் நகராட்சி நகர மன்ற துணை தலைவர் அருள்வடிவு முனுசாமி (திமுக),
மமக 6 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அ.ஸமீனாபேகம் அப்துல்ஹக்கீம், TMMP மாவட்ட பொருளாளர் பாத்திமுத்து அஷ்ரப்அலி,
TMMP ஆயிஷா முபாரக் அலி,
TMMP ஆஜரா அப்துல்நாசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத் தலைவர் மு. அப்துல் ஹக்கீம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.
இறுதியாக மமக நகர துணை தலைவர் முஜிபுர் ரஹ்மான் நன்றியுரையாற்றினார்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )
செய்திகள் & விளம்பர தொடர்புக்கு
97 87 416 486