கிருஷ்ணகிரியில் முரசொலிமாறன் 22 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. !
கிருஷ்ணகிரி
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் 22 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் தலைமையில் முரசொலிமாறன் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், கழகத் தோழர்கள் கலந்து கொண்டு முரசொலி மாறன் அவர்களது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர்
மாருதி மனோ
