எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி.!
அதிமுக
சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், அதிமுவில் உள்ள நடிகை கவுதமியும் எடப்பாடி பழனிச்சாமி மீது செம கடுப்பில் இருக்கிறார்களாம்.
"ராஜபாளையம் தொகுதி உனக்குத்தான், அதிமுக சார்பில் தேர்தல் வேலையை நீங்கள் ஆரம்பித்து விடுங்கள் " என்று கவுதமிக்கு வாக்குறுதி கொடுத்திருந்தாராம் எடப்பாடி. இதனால், அந்த தொகுதியில் கடந்த 4 மாதங்களாக கவனம் செலுத்தி வந்துள்ளார் கௌதமி. மேலும், இந்த வேலைகளுக்கு பல லட்சங்களையும் செலவு செய்திருக்கிறார்.
இந்த சூழலில், ராஜபாளையம் தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுத்து விட்டு தன்னை ஏமாற்றி விட்டார் தலைவர். இதற்கு எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கக் கூடாது. தொகுதிகள் முடிவானதற்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என சொல்லியிருந்தால் நான் பல லட்சங்களை செலவு செய்யாமல் இருந்திருப்பேன் என்று கதறாத குறையாக புலம்பி வருகிறார் நடிகை கௌதமி.
பல லட்சங்கள் போச்சே
இதைப்பற்றி பேசவும், வேறு ஒரு தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் எடப்பாடியை பலமுறை கௌதமி தொடர்பு கொண்டும் அவரது ஃபோனை அட்டென்ட் பண்ணவில்லையாம் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் அவர் மீது ஏக வருத்தத்தில் இருக்கிறார் கௌதமி.
அதேபோல, தனது நண்பர் ஒருவருக்கு ராஜபாளையம் தொகுதியை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்திருந்தார் பாஜக நயினார். இது குறித்து எடப்பாடியை சந்தித்து, ராஜ பாளையத்தை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என ஏற்கனவே சொல்லி வைத்திருந்தார் நயினார் நாகேந்திரன்.எடப்பாடியும் இதற்கு ஓகே சொல்லியிருந்துள்ளார்.
ஆனால், கடைசியில் நயினாருக்கும் பெப்பே காட்டிவிட்டார் எடப்பாடி. இதனால் நயினாரும் எடப்பாடி மீது செம கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள் பாஜகவினர். எடப்பாடியின் 'அரசியல் ' செம ஹாட்டாகத்தான் இருக்கிறது என தெரிவித்த அரசியல் வட்டாரங்கள்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi
செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு
G Pay : 944 2 999 074
