உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய டாப் ஆர்டருக்கு கங்குலி அறிவுரை
ஓவல் மைதானத்தில் ரன் சேர்க்க முடியும் என்பதை அஜிங்க்யா ரஹானேவும் ஷர்துல் தாக்குரும், முன்கள ஆட்டக்காரர்களுக்கு காட்டியுள்ளதாக முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் முன்கள வீர்ர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால், இக்கட்டான நேரத்தில் நடுக்கள வீர்ர்களான அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோரின் ஆட்டத்தால் இந்தியா சற்று தலைநிமிர்ந்த்து. குறிப்பாக 7ஆவது விக்கெட்டுக்கு அஜிங்க்யா ரஹானேவும் ஷர்துல் தாக்குரும் சேர்த்த 107 ரன்களால் இந்தியா பாலோ ஆனிலிருந்து தப்பியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீர்ர் சவுரவ் கங்குலி, சரியான அணுகுமுறையை கடைப்பிடிப்பதுடன், சிறிது அதிர்ஷ்டமும் இருந்தால் ஓவலில் ரன் சேர்க்க முடியும் என்கிற செய்தியை அஜிங்க்யா ரஹானேவும் ஷர்துல் தாக்குரும் முன்கள வீர்ர்களுக்கு தந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முதன் இன்னிங்ஸில் இந்திய அணி மீண்டு வந்திருப்பது நம்பிக்கையை அளித்திருப்பதாகவும் கங்குலி கூறியுள்ளார்.