எதிர்மறை அரசியலில் சிக்கியுள்ள எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி சாடல்
டெல்லி:'அமிர்த் பாரத் ஸ்டேஷன்' திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 508 ரயில் நிலையங்கள் மறு சீரமைக்கப்படுகின்றன. ரூ.24,470 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்தபடி காணொலி காட்சி வாயிலாக இன்று (ஆக.6) தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் எதிர்மறை அரசியல் சிக்கித் தவிப்பதாக விமர்சித்தார். ஊழல், வாரிசு அரசியல், வாக்கு அரசியல் போன்ற நாட்டின் அனைத்து தீமைகளுக்கும் “இந்தியாவை விட்டு வெளியேறு” எதிர்க்கட்சிகளை மக்கள் கூறி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
“துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சியின் ஒரு பகுதியினர் இன்னும் பழைய வழிகளில் சிக்கித் தவிக்கின்றனர், அவர்கள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள், பிறரையும் வேலை செய்ய அனுமதிக்க மாட்டார்கள்” என்று மோடி சாடினார். “தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது,
நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் சின்னம், அதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் உள்ளது, ஆனால், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கூற ஏற்க எதிர்க்கட்சிகளின் ஒரு பிரிவு எதிர்க்கிறது“ என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.