“எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்“: பிரதமருக்கு ராகுல் பதில்
டெல்லி: “நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்” என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான I.N.D.I.A “ ஒரு கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாஹிதீன்“ என்றெல்லாம், பாரதிய ஜனதாவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மணிப்பூர் மக்களுக்கு உறுதுணையாக இருந்து, ஒவ்வொ ரு பெண் மற்றும் குழந்தையின் கண்ணீரைத் துடைக்க நாங்கள் உதவுவோம்“ என்று குறிப்பிட்டுள்ளார்.மணிப்பூர் மக்களுக்கு அன்பையும் அமைதியையும் மீண்டும் கொண்டு வருவோம்;
மணிப்பூர் இந்தியாவில் தான் உள்ளது என்ற எண்ணத்தை மீண்டும் உருவாக்குவோம் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.