ஆவின் பால் பொருட்கள் விலை ரூ.100 வரை உயர்வு; அரசின் முடிவால் மக்கள் அதிர்ச்சி
சென்னை: ஆவின் பால் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வு இன்று முதல் (ஜூலை 25) அமலுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே, தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்துப் போய் உள்ளனர். இதுபோன்ற சூழலில் ஆவின் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஆவின் பன்னீர் மற்றும் பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி இருக்கிறது. அதன்படி இந்தப் பொருட்களின் விலை ரூ.20 முதல் ரூ.100 வரை அதிகரித்துள்ளது. ஆவின் பன்னீரின் விலை ஒரு கிலோ ரூ.450-லிருந்து ரூ.550ஆக உயர்த்தப்பட்டிருக்கின்றது. இதேபோன்று பாதாம் மிக்ஸ் 200 கிராமின் விலை ரூ.100-லிருந்து ரூ.120 ஆக அதிகரித்துள்ளது.