முதியோர் ஓய்வூதியம் ரூ.1,200 ஆகிறது: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
சென்னை : தமிழ்நாட்டில் முதியோர் உள்பட சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோருக்கான தொகை மாதம் ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (22, ஜூலை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.1,200 ஆக உயர்த்த, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் மூலம் 30 லட்சத்து 55 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் கூறினார். உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.