பொறியியல் படிப்பு கலந்தாய்வு; அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி

பொறியியல் படிப்பு கலந்தாய்வு; அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி

சென்னை:  தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாட்டில் 460-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி ஜூன் 4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. பொறியியல் படிப்புக்கு சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 6ஆம் தேதியும் தரவரிசை ஜூன் 26ஆம் தேதியும் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அன்றைய தினம் தொடங்கி ஜூலை 26ஆம் தேதி வரை சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 9ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை இரண்டாம் சுற்று கலந்தாய்வு நடைபெற உள்ளது.