மணிப்பூரில் பெண்களின் ஆடைகளைக் களைந்து ஊர்வலம்; அதிரவைத்த வீடியோ

மணிப்பூரில் பெண்களின் ஆடைகளைக் களைந்து ஊர்வலம்; அதிரவைத்த வீடியோ

இம்பால்: மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதங்களாக மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் மெய்தெய் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க கோரி நடைபெற்ற பேரணியில் வெடித்த மோதல் மாநிலம் முழுவதும் பரவியது.

கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் மாநிலத்தை விட்டு வெளியேறி விட்டனர். வீடுகள் வாகனங்கள், கல்வி நிலையங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பொதுச் சொத்துகளுக்கு தீ வைக்கப்பட்டதால் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழலில், கலவரம் வெடித்த மறுநாள் அதாவது மே 4ஆம் தேதியன்று, குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி பல ஆண்கள் அழைத்துச் சென்ற கொடூர காட்சி தற்போது வெளியாகி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் அந்தப் பெண்களில் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், மகளிர் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.