ஆட்டோ விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

மகனின் திருமண பத்திரிக்கை கொடுத்துவிட்டு ஆட்டோவில. வந்தவர்கள் அரசு பேருந்து மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.. சென்னையில் இருந்து இன்று பிற்பகல் புதுச்சேரி நோக்கி அரசு விரைவு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதேசமயம் கல்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி பயணிகளுடன் ஷேர் ஆட்டோ வந்துகொண்டிருந்தது. மாமல்லபுரம் அருகே மணமை என்ற இடத்தில் வந்தபோது, அதிவேகத்தில் வந்த அரசு பேருந்து, ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோ முற்றிலும் சிதைந்தது. அதில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 3 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மே 25ம்தேதி மகனுக்கு திருமணம் வைத்துள்ள நிலையில் திருமண பத்திரிக்கை கொடுத்துவிட்டு ஆட்டோவில் வந்த இரண்டு சிறுமிகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.

1 / 1

1.

6 பேர் விபத்தில் பலியான சோகம்